கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி கவலைக்கிடம்....

 
Published : May 20, 2017, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி கவலைக்கிடம்....

சுருக்கம்

kannada actor rajkumar wife admitted in hospital

பிரபல கன்னட நடிகரின் மனைவியும், தயாரிப்பாளருமான பர்வதம்மா, 77 வயதான அவர் மூச்சி திணறல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவரது உடல் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது இவரது உயிரை காக்க செயற்கை சுவாசம், மற்றும் டயாலிசிஸ் போன்ற சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே மார்பக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, புற்றுநோய் குணமடைந்தாலும் அதன் தாக்கத்தால் கணையம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு உயிர்க்காகும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டாலும், கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவரை, இவரது மகனும் கன்னடத்தில் முன்னணி நடிகருமான சிவராஜ் குமார், புனித்ராஜ் , மகள் நாகம்மா உள்ளிட்ட பலர் மருத்துவமனையில் இவரது உடல்நிலைக்குறித்து விசாரித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!