
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஏற்கனவே கொளுத்தி போட்ட பல அந்தரங்க விஷயங்கள் இன்னும் கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகினர் மத்தியில் புகைந்து கொண்டிருந்தாலும், தொடர்ந்து பல வெடிகளை கொளுத்தி போட்டு வெடிக்க வைக்கிறார்.
'ரெட்டியின் டைரி', என்கிற படத்தின் மூலம் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து, நல்லவர்கள் போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும், பிரபலங்களின் முகத்திரையை கிழிப்பேன் என கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி. அந்த படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் ஒரு சில படங்களிலும் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகரும், திமுக இளைஞர் அணி தலைவருமான, உதயநிதி பற்றி பரபரப்பாக பேசி அதிரவைத்தார். உதயநிதி ஸ்டாலின் ‘கதிர்வேலனின் காதல்’காலத்து ஹைதராபாத் ராத்திரி நேரத்து சம்பவம் ஒன்றை நினைவூட்டி,...அப்ப சொல்லிட்டு இப்ப வரைக்கும் ஒரு படத்துல கூட சான்ஸ் தராம இருக்கீங்க. இது நல்லா இல்லையே பாஸ்’என்கிற தொனியில்,... விரைவில் நான் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியே ஆகவேண்டும். அதற்கான பிரஸ் மீட் நடக்கவிருக்கிறது ... என்று பகீர் கிளப்பியிருக்கிறார். அந்த ஹைதராபாத் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் விஷால் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கட்டுக்கடங்காத கவர்ச்சி உடையில் பாத்ரூமில் இருந்த படி, செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... தைரியமாக இல்லாவிட்டால் ஒருவேளை நீங்கள் பர்பெக்ட் இல்லை என கூறி... அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் எனது ரசிகர் என தெரிவித்துள்ளார்.
அந்த பதிவு இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.