’ஏண்ணே, நீ இன்னும் கிளம்பலையாண்ணே'...சேரனுக்கு அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்...

Published : Nov 14, 2019, 05:00 PM IST
’ஏண்ணே,  நீ இன்னும் கிளம்பலையாண்ணே'...சேரனுக்கு அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்...

சுருக்கம்

அதன் தொடர்ச்சியாய் நேற்று ஆங்கில ‘ஜோக்கர்’படத்தின் போஸ்டரை சேரனுக்கு டேக் பண்ணிவிட்ட ஒருவர்,...ஒருவனை [அதாவது கவினை]க் கடுபேத்தி,வெறுப்பேத்தி,வெறியனாக்கி தவறுகள் பல செய்ய வைத்து இதுதான் அவன் சுயரூபம் என சொல்லும் சமூகம் இது’என்று சேரனைத் தாக்கியிருந்தார்.  

’அண்ணே முகநூல், ட்விட்டர் பக்கங்களை விட்டு வெளியேறி அடுத்த படம் இயக்குற பொழைப்பப் பாருண்ணே’என்று பலரும் தொடர்ந்து யோசனைகள் சொல்லி வந்தாலும் கவின்,லாஸ்லியா வகையறாக்களுக்கு சவால் விடுவதை நிறுத்துகிறபாடில்லை இயக்குநர் சேரன்.

பிக்பாஸ் சீஸன் 3’நிகழ்ச்சி முடிந்து இல்லத்துவாசிகள் அனைவரும் தங்கள் அடுத்த பொழைப்பைப் பார்க்கக் கிளம்பிவிட்ட நிலையில் இயக்குநர் சேரன் மட்டும் இன்னும் விடாப்பிடியாய் கவின், லாஸ்லியா கோஷ்டிகளின் தூண்டிலுக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்.அதன் தொடர்ச்சியாய் நேற்று ஆங்கில ‘ஜோக்கர்’படத்தின் போஸ்டரை சேரனுக்கு டேக் பண்ணிவிட்ட ஒருவர்,...ஒருவனை [அதாவது கவினை]க் கடுபேத்தி,வெறுப்பேத்தி,வெறியனாக்கி தவறுகள் பல செய்ய வைத்து இதுதான் அவன் சுயரூபம் என சொல்லும் சமூகம் இது’என்று சேரனைத் தாக்கியிருந்தார்.

அதைக் கண்டு காண்டான சேரன்,...ஒருத்தரபாத்து சம்பந்தமே இல்லாம பொறாமை பட்டு சாவுறதவிட ஒழுங்கா உழைச்சு பொழைச்சு போட்டியா வந்து நின்னுகாட்டலாம்ல. முகத்தை காமிக்காம இன்னொரு படத்தைவச்சு ஒளிஞ்சுக்குறத விட நீ உன் போட்டோவ வச்சு தில்லா நின்னு பதில் சொல்லு அங்க ஆரம்பிக்கும் உன் வெற்றி. இதுக்குமேல பதிலுமில்ல.. பதிவுமில்ல...என்று பதிலளித்திருக்கிறார். அப்பதிவுக்குக் கீழே சேரனின் ரசிகர் ஒருவர்,...Replying to 
@directorcheran ஏண்ணே,  நீ இன்னும் கிளம்பலையாண்ணே.... போண்ணே 
போய் படத்தை இயக்குகிற வழியப்பாருண்ணே....அவனுகளுக்கு,
யாரையாவது உசுப்பேத்திட்டே இருக்கிறது ஒரு போதைண்ணே...என்று வடிவேலு ஸ்டைலில் கமெண்ட் அடித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினியுடனான திரைப்படம் எப்போது தொடங்கும்? - ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
தனி விமானம் மூலம் மும்பை பறந்த விஜய்.. பின்னணி என்ன? அரசியல் வியூகமா? ஜன நாயகன் அப்டேட்டா?