"ஆக்‌ஷன்" படம் சுமார் தான்... விஷால் படத்திற்கு ஆப்பு வைத்த ஸ்ரீரெட்டி... முகநூலில் போட்ட அதிர்ச்சி கமெண்ட்...!

Published : Nov 16, 2019, 04:17 PM IST
"ஆக்‌ஷன்" படம் சுமார் தான்... விஷால் படத்திற்கு ஆப்பு வைத்த ஸ்ரீரெட்டி... முகநூலில் போட்ட அதிர்ச்சி கமெண்ட்...!

சுருக்கம்

படம் சுமார் ரகம் தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், விஷாலின் தோழியான கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி போட்டுள்ள டுவிட்டர் பதிவு படத்திற்கு பெரிய ஆப்பாக அமைந்துள்ளது. 

மதகஜ ராஜா, ஆம்பள படத்தை தொடர்ந்து 3வது முறையாக சுந்தர் சி - விஷால் கூட்டணி கைகோர்த்துள்ள படம் "ஆக்‌ஷன்". இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஐஸ்வர்யா லட்சுமி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.  விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் ரிலீஸ் ஆகாததால் விஷாலின் ஆக்‌ஷன் படத்திற்கு அடித்தது லக்கி பிரைஸ். சங்கத்தமிழன் ஓட வேண்டிய திரையரங்குகளிலும் ஆக்‌ஷன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. டிரெய்லரில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இடம் பெற்ற சண்டை காட்சிகள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: சோலேவா ரிலீஸ் ஆகி கெத்து காட்டும் "ஆக்‌ஷன்"... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

எதற்கு என்றே தெரியாத சண்டை காட்சிகள் ரசிகர்களை மிகவும் சோர்வடைய வைத்துள்ளது. இதனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.என்னதான் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்தாலும் படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. படம் சுமார் ரகம் தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், விஷாலின் தோழியான கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி போட்டுள்ள முகநூல் பதிவு படத்திற்கு பெரிய ஆப்பாக அமைந்துள்ளது. 

நேற்று உலகம் முழுவதும் வெளியான ஆக்‌ஷன் திரைப்படத்தை பார்த்த விஷாலின் நெருங்கிய தோழியான ஸ்ரீரெட்டி படம் பற்றிய தனது கமெண்ட்டை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விஷால் படம் பிலோ ஆவ்ரேஜ், பாவம், சாரி விஷால் ரெட்டி" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஆக்‌ஷன் திரைப்படம் சராசரிக்கும் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் ஏற்கெனவே சிக்கலில் சிக்கியுள்ள விஷால் திரைப்படத்திற்கு மிகப்பெரிய சறுக்கலாக மாறியுள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!