ரஜினியோட ‘முத்து’படத்தை ஜப்பான்ல எத்தனை வாட்டிதான் பாஸ் ரிலீஸ் பண்ணுவீங்க?...

Published : Nov 16, 2019, 04:11 PM IST
ரஜினியோட ‘முத்து’படத்தை ஜப்பான்ல எத்தனை வாட்டிதான் பாஸ் ரிலீஸ் பண்ணுவீங்க?...

சுருக்கம்

இந்தப் படத்தின் மூலம் ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலம் இந்தப் படத்தை ஜப்பான் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இன்னும் சில ரசிகர்கள் சென்னைக்கு வந்து ரஜினிகாந்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்ட ஜப்பான் ரசிகர்கள்  தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு துவங்கிய ரசிகர் மன்றம் ஒன்று இன்றுவரை உள்ளது.  

ஜப்பான் தேசத்து மனிதர்கள் குறித்து பெருமையாகப் பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, இந்தச் செய்தி ஏற்கனவே பெரும் உறுத்தலாக இருந்த நிலையில் ‘மறுபடியும் அதே தான் பாஸ்’என்று சொல்லி மயக்கமடைய வைக்கிறார்கள்.யெஸ் பாஸ் ரஜினியோட 'முத்து’படம் மறுபடியும் ஜப்பான்ல ரீ ரிலீஸ் ஆகப்போகுதாம்.

1995-ம் ஆண்டு ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான படம் ’முத்து’.இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். வெளியான சமயத்தில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலம் இந்தப் படத்தை ஜப்பான் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இன்னும் சில ரசிகர்கள் சென்னைக்கு வந்து ரஜினிகாந்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்ட ஜப்பான் ரசிகர்கள்  தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு துவங்கிய ரசிகர் மன்றம் ஒன்று இன்றுவரை உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி ’டான்சிங் மஹாராஜா’ என்ற பெயரில் 4டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ஜப்பானில் முத்து படம் வெளியாகிறது என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளார். ஜப்பான் மக்கள் மறுபடியும் மறுபடியும் ‘முத்து’படத்தை பாக்குற அளவுக்கு அவ்வளவு வேல வெட்டி இல்லாம இருக்காங்களா பாஸ்?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?