விஜயின் பிகில் வெற்றி... இரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த தளபதி ரசிகர்கள்..!

Published : Nov 16, 2019, 02:57 PM IST
விஜயின் பிகில் வெற்றி...  இரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த தளபதி ரசிகர்கள்..!

சுருக்கம்

படங்கள் வெற்றியடையும்போது பேனர் போஸ்டர் அடிப்பதற்கு பதிலாக அந்த பணத்தை விவசாயிகள் உட்பட கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுடைய நல்வாழ்விற்கு துணையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.  

விஜய் நடித்த பிகில் படத்தின் மொத்த வசூல் ரூ. 300 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்க அதிபர்கள் அனைவரும் லாபம் பெற்றதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் அடிக்காமல் அதற்கு பதிலாக அந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்திருந்தனர். 

தற்போது ’பிகில்’படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள் இந்தக் கொண்ட்டாட்டத்திற்கும் பேனர் வைக்காமல் அதற்கு பதிலாக நலத் திட்டங்களை மீண்டும் செய்து வருகின்றனர். தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ‘பிகில்’பட வெற்றியை கொண்டாடும் வகையில் பேனர் வைப்பதை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக இரண்டு விவசாயிகள் வங்கியில் வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனை அடைத்துள்ளனர். இதனை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு அந்த இரண்டு விவசாயிகளும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

 

‘பிகில்’படத்தின் வெற்றியால் இரண்டு விவசாயிகளின் கடன் தீர்க்கப்பட்டது போல் மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரின் படங்கள் வெற்றியடையும்போது பேனர் போஸ்டர் அடிப்பதற்கு பதிலாக அந்த பணத்தை விவசாயிகள் உட்பட கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுடைய நல்வாழ்விற்கு துணையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய ரஜினி, பிரதீப்... இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியல் இதோ
கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்