
நடிகர்கள் மீது 56 புகார்களை பதிவு செய்துள்ள ஸ்ரீ ரெட்டி...! வெளிவந்த அடுத்த அதிரடி தகவல் ..!
நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என தனக்கு அழைப்பு விடுப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நெருக்கடியை தான் சந்தித்து வருவதாகவும் நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்து உள்ளார்.
அந்த வரிசையில் கோலிவுட்டில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திரங்கள்...இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது என கூறலாம்.
இந்நிலையில், உங்கள் பிரச்சனைக்கு சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிடுவதை விட காவல் நிலையத்தில் அல்லவா புகார் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு, காவல் நிலையத்தில் புகார் அளித்து என்ன பயன் ..? நான் ஏற்கனவே தெலுங்கு நடிகர்களை பற்றி புகார் அளித்து விட்டேன். 56 புகார்கள் கொடுத்து விட்டேன்...யாரும் எந்த நடைவடிக்கையும் எடுக்க வில்லை..அதனால் தான்...நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன்...எனக்கு தீர்வு கிடைக்க வேண்டும்...அதற்காக தான் இந்த போராட்டம்...என்னை போன்று வேறு எந்த பெண்ணும் இது போன்று பாதிக்கக்கூடாது என அவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.