
நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து கூறி வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் ரமேஷ் கண்ணா பதில் அளித்து உள்ளார்
நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என தனக்கு அழைப்பு விடுப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நெருக்கடியை தான் சந்தித்து வருவதாகவும் நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்து உள்ளார்.
அந்த வரிசையில் கோலிவுட்டில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திரங்கள்....இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது என கூறலாம்..
இந்நிலையில் தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீ ரெட்டி மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், வேண்டும் என்றே ஸ்ரீ ரெட்டி இவ்வாறு செய்வதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா, பிரபல இதழுக்கு பேட்டி அளிக்கும் போது, ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் நான் வரவில்லையே...அப்படி என் பெயர் போட்டு இருந்தால் கொஞ்சம் பிரபலம் அடைந்து இருப்பேன் என வருத்தமாகவும் கிண்டலாகவும் தெரிவித்து உள்ளார்....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.