பிரபல நடிகருடன் நடித்ததால் திசை மாறிய வாழ்க்கை...! கண்ணீர் விடும் நடிகை..!

 
Published : Jul 23, 2018, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
பிரபல நடிகருடன் நடித்ததால் திசை மாறிய வாழ்க்கை...! கண்ணீர் விடும் நடிகை..!

சுருக்கம்

salman khan thabang movie turn the mahie gill life

பாலிவுட் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு 'ஹவாயின்'  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை 'மகி கில்'  இந்த படத்தை தொடர்ந்து பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்தார்.

இந்நிலையில் இவருக்கு நடிகர் சல்மான் கான் நடித்த 'தபாங்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறு வேடமாக இருந்தாலும் பரவாயில்லை... சல்மான் கான் படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

இந்த படத்தில் இவர் மிகவும் சிறிய ரோலில் நடித்ததால், திரைப்படம் வெற்றி பெற்றாலும்  ரசிகர்கள் மத்தியில் இவருடைய கதாப்பாத்திரம் பேசும் அளவிற்கு இல்லை. 

இந்த படத்தில் நடித்ததில் இருந்து, இயக்குனர்கள் பலர் இவரை தங்களுடைய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்க அணுகி வருகிறார்களாம். இதனால் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவரின் திரையுல பயணம் சல்மான் கான் திரைப்படம் மூலம் திசை திரும்பி விட்டதாக நண்பர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பி வருகிறாராம் மகி கில்.

தற்போது இவர் சஞ்சய் தத் நடித்துள்ள 'சஹீப் பிவி அவுர் கேங்ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மீண்டும் இவர் பழைய நிலையை அடைய உதவுமா..? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!