படுமோசமான அந்த படத்தை சுட்டிக்காட்டி, ஸ்ரீரெட்டி இந்த விவகாரமான இயக்குநரை படுக்கைக்கு அழைக்கிறார் என சோசியல் மீடியா வாசிகள் கண்டபடி திட்டிவருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர். படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறினார். தன்னை பல நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர் என இயக்குநர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என ஒரு நீண்ட பட்டியலையே கையில் வைத்துக்கொண்டு அலைந்தார். அதனால் அவர் வாயில் இருந்து அடுத்து யார் பெயர் வரப்போகிறதோ என்ற பீதியில் தமிழ் திரையுலகமே கலக்கிப் போய் இருந்தது.
undefined
அது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் படவாய்ப்பிற்காக கேவலமான கேப்ஷன்களுடன் படுகவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவை படுக்கைக்கு அழைக்கும் தொனியில் ஸ்ரீரெட்டி போட்ட ட்வீட் நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கொரோனா குறித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீரெட்டி முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் “நீங்கள் கொரோனாவை விர அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள்...நான் உங்களை இன்னும் காதலிக்கிறேன்... வாங்க நாம் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி செய்யலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
வரி செலுத்த தானே கூப்பிட்டிருக்கு அதில் என்ன தப்பு என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஜிஎஸ்டி என்றால் சரக்கு மற்றும் சேவை வரி அல்ல. 2018ல் குடியரசு தினத்தன்று ராம் கோபால் வர்மா ஒரு மாதிரியான டாக்குமெண்ட்ரியை வெளியிட்டு கைதானாரே நினைவிருக்கிறதா...?. அதன் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்பதன் சுருக்கமே ஜிஎஸ்டி என நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.
படுமோசமான அந்த படத்தை சுட்டிக்காட்டி, ஸ்ரீரெட்டி இந்த விவகாரமான இயக்குநரை படுக்கைக்கு அழைக்கிறார் என சோசியல் மீடியா வாசிகள் கண்டபடி திட்டிவருகின்றனர். ஏற்கனவே ராம் கோபால் வர்மாவுடன் டேட்டிங் செல்ல வேண்டும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி ஸ்ரீரெட்டி பரபரப்பு கிளப்பியது குறிப்பிடத்தக்கது.