
கோலிவுட்டை அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் வாழவைக்கும் ஹீரோயின்கள் கேரளத்து கிளிகள்தான். ‘பாண்டி பயலுவ’ என்று தமிழ்நாட்டுக்காரர்களை மற்ற விஷயத்தில் உதறித் தள்ளினாலும் சினிமா என்று வரும்போது கேரள நடிகைகளுக்கு கால் பதிக்கவும், காசு குவிக்கவும் தமிழ்நாடுதான் தேவைப்படுகிறது.
அந்த ரூட்டில்தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தினுள் கால் வைத்தார் அமலாபால். கேரள நடிகைகளை பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் நடித்து ஒன்று உச்சம் தொட்டு மெதுவாக நகர்வார்கள் அல்லது முதல் படத்தோடு மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள்.
ஆனால் அமல்ஸை பொறுத்தவரையில் அப்படியுமில்லை, இப்படியுமில்லை என புது வகை. அதாவது நம்பர் 1 ஹீரோயினாக இங்கே அவர் உச்சம் தொடவில்லை, தேறாத நாயகியாக மூட்டை கட்டி கிளம்பவுமில்லை. இதற்கெல்லாம் மாறாக தமிழ் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகளானார். ஏ.எல்.அழகப்பன் எனும் அசால்ட் தயாரிப்பாளரின் வீட்டை புகுந்த வீடாக ஏற்று வாழப்போனார்.
அமல்ஸ் - விஜய்யின் ஹனிமூன் ட்ரிப் போட்டோக்களை கலர்ஃபுல்லாக போட்டு ஹிட்டாக்கின தமிழ் பத்திரிக்கைகள். ஒல்லி பெல்லி நடிகைகள் கூட திருமணத்துக்குப் பின் குண்டாகி குஷ்புவாவார்கள். ஆனால் அமல்ஸோ ஏற்கனவே இருந்ததை விட அம்சமாகிப் போனார். கணவர் ஏ.எல்.வி.யுடன் அவர் சினிமா விழாக்களுக்கு போனபோது அம்புட்டு பயலுக கண்களையும் அமல்ஸைத்தான் மொய்த்தன. வி.ஐ.பி.1ல் தனுஷுடன் அவர் கைகோர்க்க, படம் மரண ஹிட். தனுஷ் - அமலாபால் திரை ஜோடியை கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
திருமணத்துக்கு பின் செம்ம அடாப்ஸ் வாழ்க்கை வாழ்ந்த அமலாபால் - விஜய் வாழ்க்கையில் என்ன குறுக்கிட்டதோ, எது குறுக்கிட்டதோ, யார் குறுக்கிட்டார்களோ? இருவரும் மனம் கசந்து பிரிந்து விவாகரத்துப் பெற்றனர்.
இதன் பிறகு அமலாபால் சொந்த ஊரான கேரளத்தில் போய் செட்டிலாவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அமல்ஸோ இதன் பிறகுதான் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் கிளம்பினார். யோகா, புதிய நண்பர்கள், ஜில் சிக் ஜக் பாடி மெயிண்டனிங், புதிய படங்கள், புதிய பழக்கங்கள், ஹாட் கிளாமர் ரோல் என்று அவரது வாழ்க்கை பட்டாம் பூச்சி தாறுமாறான கலர்களுடன் சிறகு விரித்தது.
அடிக்கடி தனது எல்லை தாண்டிய கிளாமர் ஸ்டில்களை எடுத்து இன்ஸ்டாகிராமை தெறிக்க விடுகிறார், திருட்டுப்பயலே 2 வில் ஓவர் செக்ஸியாய் நடித்திருக்கிறார், தம் அடித்தபடி நடித்திருக்கிறார் என்று மாதாமாதம் ஒரு பஞ்சாயத்து அமல்ஸை மையமாக வைத்து ஓடுவது வாடிக்கையாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனது காஸ்ட்லி காரை பாண்டிச்சேரியில் போலி முகவரியில் பதிவு செய்து சட்டத்தை ஏமாற்றியுள்ளார் எனும் பஞ்சாயத்து தமிழ்நாடு - புதுவை - கேரளா எனும் 3 மாநிலங்களையும் சேர்த்து முக்கோணமாய் உட்கார்ந்து அமல்ஸை புரட்டி எடுக்கிறது.
ஆனாலும் கிளி இதற்கெல்லாம் கலங்கியபாடில்லை. இதே போன்றதொரு பஞ்சாயத்தில் சிக்கிய மலையாள நடிகர் பகத் பாசில் கூட’எனது காரை கேரளத்தில் பதிவு செய்து முறையான வரி கட்டுகிறேன்.’ என்று பணிந்துவிட்டார். ஆனால் அமல்ஸோ ‘கேரளாவில் வரி கட்டமாட்டேன்.’ என்று தடாலடியாக கூறியுள்ளார்.
அமல்ஸுக்கு எங்கிருந்து வந்திருக்கிறது இவ்வளவு தைரியம், அரசாங்கத்தையும், அரசு அதிகாரிகளையும் எதிர்த்து ‘அதெல்லாம் முடியாது’ என சொல்லும் தைரியத்தை அவருக்கு கொடுத்தது யார்? எந்த ‘சூப்பர்’ பவர் அவருக்கு பின்னணியில் இருக்கிறது என்பது புரியவில்லை. அது யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.
மொத்தத்தில் அமல் ராக்ஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.