
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில், புத்தாண்டு தினத்தன்று சிவாச்சாரியார்களை கொண்டு பூஜை நடத்தப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு ரஜினிகாந்துக்கு பல வகையில் சங்கடங்களை தந்த ஆண்டு என்றே சொல்லலாம். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ரஜினி, அமெரிக்காவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கிட்னி தொடர்பான உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அவருடைய கபாலி படம் ரிலீசுக்கு கூட ரஜினி இங்கு இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட ரஜினியுடன் இருந்து அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா, கவனித்து கொண்டார்.
மேலும், இளைய மகள் சவுந்தர்யா விவாகரத்து பிரச்சனை, ரஜினியை மனவேதனைக்கு உள்ளாக்கியது. லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆசிரம் பள்ளியில் சம்பளம் தராமல் ஊழியர்கள் போராட்டம் நடத்தியது, ஊடகங்களில் வெளியானதால் ரஜினி கவலை அடைந்தார்.
இதுபோல் பல பிரச்சனைகளை எதிர் கொண்ட ரஜினி, இந்த 2017ம் வருடம் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் மன நிம்மதியை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு, வீட்டில் பிரமாண்ட பூஜை ஒன்றை நடத்தினார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.