தொடர் சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Sep 16, 2020, 8:16 PM IST
Highlights

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அப்போதில் இருந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் கடந்த வாரம் திங்கள் கிழமை கொரோனாவில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.

எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடைசியாக 10ம் தேதி வீடியோ வெளியிட்டிருந்த சரண், நான்கு நாட்கள் கழித்து நேற்று மீண்டும் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து பேசியிருந்தார். அதில், பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கி உள்ளார். முழுமையாக அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. எல்லோரையும் அடையாளம் காண தொடங்கி உள்ளார். பிஸியோ சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கிறது. மருத்துவர்களின் உதவியுடன் 15-20 நிமிடங்கள் எழுந்து அமர்கிறார். வரும் நாட்களில் நீண்ட நேரம் அவர் உட்கார வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என நல்ல செய்தி கூறியிருந்தார். 

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

எஸ்.பி.பி. எப்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவர் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது; தொடர்ந்து எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். 

click me!