எவனென்றுநினைத்தாய்... உலகநாயகனை இயக்குவதை அதிகார பூர்வமாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்!

By manimegalai aFirst Published Sep 16, 2020, 6:31 PM IST
Highlights

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய, 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
 
விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே, தளபதி விஜயுடன் இணைந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு, தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அடுத்ததாக யாரை இயக்குனர், என மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தற்போது நடிகர் உலக நாயகனை வைக்குது இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் once upon a time there lived a ghost என வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. மேலும் #எவனென்றுநினைத்தாய் என்கிற ஹேஷ்டக்கும் இடம்பெற்றுள்ளது. 

கமஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aandavarukku Nandri 🙏🏻 pic.twitter.com/ealPsOWxFS

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

click me!