
நட்சத்திர காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்களது திருமண நிகழ்வு சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்களாம்.
குறிப்பாக நடிகை நயன்தாராவின் குடும்ப உறவினர்கள் தான் அதிகளவில் கலந்துகொள்ள உள்ளார்களாம். மறுபுறம் விக்னேஷ் சிவன் தனது உறவினர்களுக்கு அழைப்பே விடுக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியை அடுத்துள்ள லால்குடி தான் விக்னேஷ் சிவனின் சொந்த ஊர். அங்கு வசித்து வரும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு அவர் அழைப்பே விடுக்கவில்லையாம்.
திருமணத்துக்காக பரிசுப் பொருட்கள் எல்லாம் வாங்கி வைத்து ஆவலோடு காத்திருந்த விக்னேஷ் சிவனின் உறவினர்கள், அவர் அழைப்பிதழ் தராததால் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்யாணத்துக்கு குடும்ப உறவினர்களையே விக்னேஷ் சிவன் அழைக்காதது ஆச்சர்யமாகத் தான் உள்ளது.
இதையும் படியுங்கள்... Nayanthara Wedding : விக்கி - நயன் திருமணத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் லீக்கானது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.