அப்பாவின் பிறந்தநாளில் புதிய தொழிலுக்கு அச்சாரம் போட்ட மகள் சௌந்தர்யா!

Published : Dec 12, 2019, 01:27 PM IST
அப்பாவின் பிறந்தநாளில் புதிய தொழிலுக்கு அச்சாரம் போட்ட மகள் சௌந்தர்யா!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ஒரு இயக்குனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இவர் ஏற்கனவே தன்னுடைய அப்பாவை வைத்து 'கோச்சடையான்' படத்தை மிகவும் பிரமாண்டமாக இயக்கியவர். இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான, 'வேலையில்லா பட்டதாரி 2 ' படத்தை இயக்கினார்.

பின் திருமணம் செய்து கொண்டு, கடந்த சில நாட்களாக குழந்தை, குடும்பம் என பிசியாக இருந்த சௌந்தர்யா, தற்போது 'பொன்னியின் செல்வன்' கதையை வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

ஏற்கனவே ஒரு பக்கம், இந்த வெப் சீரிஸின் கதை, தொழில் நுட்ப பணிகள் மற்றும் நாயகன் - நாயகி தேர்வு தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக தகவல் வந்த நிலையில், தற்போது தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு சௌந்தர்யா, 'MAY6 என்டர்டெயின்மெண்ட்' என்கிற இணையதள நிறுவனத்தை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!