
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள், தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி - 2 ' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கி உள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின், உதவி இயக்குனர், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த உள்ளதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான, விஐபி - 2 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சந்தோஷ்.
இவர் தற்போது, இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களை இயக்கிய, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மற்ற தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.