சௌந்தர்யா - விசாகன் திருமணம் வீட்டில் தான்? ஆனா வரவேற்பு வேற லெவல்! வெளியானது புகைப்படம்!

Published : Jan 26, 2019, 04:28 PM ISTUpdated : Jan 26, 2019, 04:40 PM IST
சௌந்தர்யா - விசாகன் திருமணம் வீட்டில் தான்? ஆனா வரவேற்பு வேற லெவல்! வெளியானது புகைப்படம்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் - பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், பிப்ரவரி 11 ஆம் தேதி, சென்னை போயர்ஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் - பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், பிப்ரவரி 11 ஆம் தேதி, சென்னை போயர்ஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தில், ரஜினி மற்றும் வணங்காமுடியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

திருமணத்தை பிரமாண்டமாக நடத்த குடும்பத்தினர் வற்புறுத்திய போதிலும், இது இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பதால் ரஜினிகாந்த், திருமணம் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டதால் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர் குடும்பத்தினர்.

ஆனால், சௌந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது திருமணம் ஆன அன்றே காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில் தற்போது திருமண வரவேற்பு பத்திரிக்கை வெளியாகியுள்ளது. 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?