
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு படத்தில் நடிக்க மட்டும் 9 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் சமீபத்தில் தான் இவருக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ்க்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தை தொடர்ந்து தற்போது 'ஸ்கை இஸ் பிங்' என்கிற இந்தி படத்திலும், 'இஸ் நாட் ரொமான்டிக்' என்கிற ஹாலிவுட் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர், அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கற்கள் ஆகியவை, ரசிகர்களால் எப்போதும் கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில் அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
அதன் பெயரிலேயே டயானா என்று இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார் பிரியங்கா. இதையும் 93 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். செல்ல நாயுடன் அதிக நேரம் செலவிடும் பிரியங்கா, ஷாப்பிங் செல்லும்போது கூட அழைத்து செல்கிறார். இப்போது அந்த நாய்க்கு விசேஷமாக வடிவமைத்த உடையை வாங்கி அணிவித்திருக்கிறார்.
இது பயணிக்க ட்ராவல் பேக், ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அதற்குள் புதிய உடையுடன் அந்த நாய் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. டயானாவுக்கு ட்ராவல் வீட்டை அழகாக வடிவமைத்து கொடுத்தமைக்கு மிமிக்கு நன்றி என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த உடை மற்றும் ட்ராவல் வீடு செலவு மட்டும் ரூ.1 .50 லட்சம் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.