அஸிஸ்டென்ட் கமிஷனராக மாறிய  சௌந்தரராஜா!

 
Published : Sep 16, 2017, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
அஸிஸ்டென்ட் கமிஷனராக மாறிய  சௌந்தரராஜா!

சுருக்கம்

soundhar raja acting assistant commissioner role

ஹீரோக்களுக்கு நண்பனாக ஆழமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சௌந்தராஜா தற்போது "ஒரு கனவு போல" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார்.

"அபிமன்யு" என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான சில காட்சிகளில் உடலை ஏற்றியும் இறக்கியும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் சௌந்தரராஜா. மேலும் இந்தப் படத்தின் மூலம் காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் மனதில் சௌந்தர ராஜா நிற்பார் என்கிறார்கள்.

இந்நிலையில் அபிமன்யு படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் இப்படி முன்னோட்டக் காட்சிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர் படக் குழுவினர்.  அவர்கள் ஆசைப்பட்ட படியே காவல்துறை உயர் அதிகாரி, அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் (Asra Garg IPS), அபிமன்யு படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சியை வெளியிட்டு படக் குழுவினரை பாராட்டினார். அஸ்ரா கார்க்,  பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!