47 years of Rajinism : ரஜினிவீட்டில் திடீர் கொண்டாட்டம் .. வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பதிவு

Published : Aug 16, 2022, 02:12 PM IST
 47 years of Rajinism : ரஜினிவீட்டில் திடீர் கொண்டாட்டம் .. வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பதிவு

சுருக்கம்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது பதிவில் தந்தை மற்றும் தாய் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து, 'எங்கள் அன்பான ஜில்லுமா அப்பாவின் மிகப்பெரிய ரசிகரும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்துடன் சேர்த்து ரஜினி தனது 47 ஆண்டுகளை நிறைவு செய்ததையும் கொண்டாடினார். இவ்விரு சந்தர்ப்பங்களையும் சிறப்பாக நினைவு கூர்ந்த சூப்பர் ஸ்டாருடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராமில் சில படங்களை பகிர்ந்திருந்தார். அதில்  சுதந்திரத்தின் வணக்கங்கள் தியாகங்கள், போராட்டங்கள் மற்றும் வலிமை அவருக்கு பிறந்த பெருமை மகள் என குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்கு பின்னால் ரஜினியின் படத்துடன் 47 வருட ரஜினிசம் என்று எழுதப்பட்டிருந்தது. 

முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு அந்நாளில் முக்கியத்துவம் குறித்த ரஜினிகாந்த் ட்விட்டரில் ஒரு குறிப்பு எழுதி இருந்தார். அதில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு நமது தாய்நாடு மரியாதையின் அடையாளமாகவும் நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் சொல்லலாம். போராட்டங்கள் மற்றும் துயரங்களை அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், வேதனையும், அவமானமும் இந்த சுதந்திரத்திற்காக தன்னலம் இன்றி  உயிர் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும்,  சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருக்கும் ஜாதி மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்களைப்  நன்றியுடன் வணங்குவோம்.

நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நமது இந்திய தேசிய கொடி திறமையுடன் நமது வீடுகள் அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களுக்கு வெளியே காட்டப்படும். மகத்தான இந்தியா 75வது சுதந்திர தினத்தில் பெருமையுடன் கொண்டாடுவோம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக நம் தேசியக்கொடி எங்கும்பறக்கட்டும் ஜெய்ஹிந்த். என டிவிட்டரில் நீண்ட பதிவு எழுதியிருந்தார்.

 

இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது பதிவில் தந்தை மற்றும் தாய் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து, 'எங்கள் அன்பான ஜில்லுமா அப்பாவின் மிகப்பெரிய ரசிகரும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார். அந்தப்படத்தில் லதா ரஜினிகாந்த் பூங்காத்தை ரஜினியிடம் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அவர்களது முன்பாக மேஜையில் இனிப்புகளும் கேக்குகளும் இடம் பெற்றுள்ளது..

 

 

தற்போது சூப்பர் ஸ்டார் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அனிருத் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒலி பதிவு செய்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!