பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் ஃப்ரீஸ் டாஸ்கின் போது தன்னை காண வந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரிடம் புரபோஸ் பண்ணி உள்ளார் செளந்தர்யா.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று பாசமழை பொழிவார்கள். அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக உள்ளே உள்ள 12 போட்டியாளர்களின் உறவினர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடியது மட்டுமின்றி அவர்கள் மீது தங்களுக்கு இருக்கும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தினர்.
அந்த வகையில் முதல் நாளில் தீபக் வீட்டில் இருந்து அவரது மனைவி மற்றும் மகன் வந்திருந்தனர். பின்னர் மஞ்சரி குடும்பத்தார் எண்ட்ரி கொடுத்தனர். மூன்றாவதாக விஷாலின் பேமிலி உள்ளே வந்தனர். நீண்ட நாட்களாக விஷால் உடன் பேசாமல் இருந்த அவரது தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து தன் மகனிடம் மன்னிப்பு கேட்ட தருணம் காண்போரை கண்கலங்க வைத்தது. இறுதியாக ரயானின் அம்மா மற்றும் அக்கா வந்திருந்தனர்.
undefined
இதையும் படியுங்கள்... உண்மையா காதலிச்சேன்; ஆனா விஷால் இப்படி பண்ணுவான்னு நினைக்கல - ஃபீலிங்ஸை கொட்டிய தர்ஷிகா
பின்னர் இரண்டாவது நாளில் செளந்தர்யாவின் பெற்றோரும் சகோதரரும் வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து ராணவ்வின் பேமிலி வந்தது, பின்னர் பவித்ரா குடும்பத்தார் வந்தார்கள். இறுதியாக அன்ஷிதாவின் தாய் மற்றும் அண்ணன் எண்ட்ரி கொடுத்தனர். இதையடுத்து மூன்றாவது நாளில் ஜெஃப்ரியின் பெற்றோர் வந்திருந்தனர். பின்னர் அருணின் அப்பா, அம்மா சர்ப்ரைஸாக வந்திருந்தார்கள். அடுத்ததாக ஜாக்குலின் அம்மா மற்றும் நண்பர்கள் வந்தனர். இறுதியாக முத்துக்குமரன் பெற்றோர் வந்திருந்தார்கள்.
இத்துடன் ப்ரீஸ் டாஸ்க் முடிவடைந்துவிட்டது என நினைத்திருந்த போட்டியாளர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று போட்டியாளர்களின் நண்பர்களை வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார் பிக் பாஸ். அந்த வகையில் முதல் ஆளாக செளந்தர்யாவின் நண்பரான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான விஷ்ணு விஜய் எண்ட்ரி கொடுத்தார். அவர் உள்ளே வந்ததும் அவருக்கு புரபோஸ் செய்து ஷாக் கொடுத்துள்ளார் செளந்தர்யா.
ஒரு தட்டில் ‘என்னை கல்யாணம் பண்ணிப்பாயா’ என எழுதி முட்டி போட்டு விஷ்ணுவிடம் கொடுத்தார் செளந்தர்யா. அவரும் அதை ஏற்று அவரை கட்டியணத்துக் கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் நண்பர்களா... இல்லை காதலர்களா என குழம்பிப்போய் உள்ளனர். விஷ்ணு விஜய் மட்டுமின்றி இன்றைய எபிசோடில் மேலும் சில ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
of
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/YfTAxXEpOX
இதையும் படியுங்கள்... ப்ரீஸ் டாஸ்கில் பிக் பாஸ் வைத்த செம ட்விஸ்ட்! நாளைக்கு தரமான சம்பவம் வெயிட்டிங்