கால்ஷீட் கொடுத்தாலும் கமல், ரஜினியுடன் படம் பண்ண மாட்டேன் - இயக்குனர் பாலா பளீச் பதில்

By Ganesh A  |  First Published Dec 27, 2024, 8:41 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கால்ஷீட் கொடுத்தாலும் அவர்களுடன் பணியாற்ற மாட்டேன் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் பிதாமகனாக கொண்டாடப்படுபவர் பாலா. விக்ரம் நடித்த சேது படம் மூலம் அறிமுகமான பாலா, திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனபோதும் தற்போது வரை வெறும் 10 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அந்த படங்கள் எல்லாம் தனித்துவமானவை, அதுமட்டுமின்றி காலம் கடந்து கொண்டாடப்படும் படங்களாக உள்ளதால், பாலாவை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமாக கருதப்படுகிறார்.

பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி உள்ளது. முதலில் இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்து, படம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், பின்னர் அருண்விஜய்யை வைத்து அப்படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. வணங்கான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... நன்றி மறந்தாரா விக்ரம்? இயக்குனர் பாலா உடன் சீயானுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை

அந்த இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினர். இந்த விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், மாரி செல்வராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா, நடிகைகள் சுஹாசினி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு, பாலாவின் படைப்புகளை பற்றி சிலாகித்து பேசினர். அதில் சூர்யாவின் தந்தை சிவக்குமார், பாலாவிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டிருந்தார்.

அதில் ஒன்று தான், நீங்கள் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்தால் அவர்களுடன் பணியாற்றுவீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு வாய்ப்பு இல்ல சார் என சட்டென பதிலளித்த பாலா, அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். அவர்களுடைய பாதை வேறு, என்னுடைய பாதை வேறு என சொன்னார். இதற்கு சிவக்குமார், உங்க படங்களில் அகோரியாக நடிக்க கூட ரெடி என அவர்கள் சொன்னால் ஒத்துப்பீங்களா என மற்றொரு கேள்வி கேட்க, அதற்கு சிரித்துக் கொண்டே அவர்கள் சொல்ல மாட்டார்கள் என ரிப்ளை செய்தார் பாலா.

இதையும் படியுங்கள்... சேது முதல் வணங்கான்; 25 வருடத்தில் பாலா இயக்கிய 10 படங்கள்!

click me!