
காமெடி நடிகர்களில் தற்போது மிகவும் பிரபலமானவர் சூரி, காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோ வேடம் போட ஆரம்பித்ததால் தற்போது இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
மேலும் இவரது தனித்தன்மையான காமெடி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் ராசாகூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்து, சினிமாவின் மேல் கொண்ட ஆர்வத்தால் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்தவர்.
இப்படி பல கஷ்டங்களை பட்டு, பலரை சிரிக்க வைத்த கூறி, இன்று மிகவும் சோகத்தில் உள்ளார், அவர் கஷ்டப்படும்போதெல்லாம் உற்சாகம் கொடுத்த அவரது தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று 10 : 15 மணிக்கு மரணமடைந்தார் அவருக்கு வயது 75 .
இவரது இறுதி சடங்குகள் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது. இந்த தகவலை அறிந்ததும் சூரி தன்னுடைய படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு. சென்னையில் இருந்து பிளைட் மூலம் மதுரை விரைந்தார்.
தந்தையை இழந்து வாடும் சூரிக்கு, நியூஸ் பாஸ்ட் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.