ஜெமினிகணேசன் அவதாரம் எடுக்கும் சூர்யா...

 
Published : Mar 27, 2017, 07:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
ஜெமினிகணேசன் அவதாரம் எடுக்கும் சூர்யா...

சுருக்கம்

surya acting gaminiganesan character in maganathi flim

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவிருப்பது பற்றி சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது. 

இந்த திரைப்படத்தை இயக்குனர் நாக்-அஸ்வின் இயக்கவிருக்கிறார்  இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். நடிகை சமந்தாவும் சாவித்திரிக்கு போட்டியாக விளங்கிய ஜமுனா ராணி வேடத்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்தப் படத்துக்காக சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசன் வேடத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் பல்வேறு கதாநாயகர்களை பரிசீலித்து வந்தனர். 

தற்போது அவர்கள் நடிகர் சூர்யாவிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா விரைவில் இதுகுறித்து முடிவெடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் சூர்யா இணைந்தால் படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மகாநதி படத்தில் சூர்யா நடிப்பது உறுதியானால் அது கீர்த்தி சுரேஷுடன் அவர் ஜோடிசேரும் இரண்டாவது படமாக அமையும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!