கணவர் போஸ் வெங்கட்டுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த சோனியா!

 
Published : Sep 21, 2017, 12:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கணவர் போஸ் வெங்கட்டுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த சோனியா!

சுருக்கம்

soniya suicide threat for husband

சின்னத்திரையில் இணைந்து பணியாற்றியதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் நடிகர் போஸ் வெங்கட் மற்றும் சோனியா!

தற்போது கணவன் மனைவி ஆகிய இருவருமே சின்னத்திரையை விட்டு விலகி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகின்றனர். போஸ் வெங்கட் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கவண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனியா தற்போது வெண்ணிலா கபடி குழு 2  மற்றும் தீரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கணவர் போஸ் வெங்கட்டுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து பிரபல ஊடகத்திடம் கூறியுள்ளார் சோனியா. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கும் என்னுடைய கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நான் பலமுறை அவரிடம் சின்னத்திரையில் இருந்து விலகி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தக் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதைக் கேட்டதே இல்லை. இந்நிலையில் இவர் படத்தில் நடிப்பதற்காக ஒரு கெட் அப் போட்டிருந்தார். அந்த கெட்-அப்பில் நடிக்கக் கூறி சின்னத்திரை இயக்குனர் ஒருவர் இவரை அணுகினார்.

இதற்கு போஸ் தன்னிடம் இப்படியே நடிக்க மாட்டேன், தொப்பி போட்டுக் கொண்டு நடிப்பதாகக் கூறி விட்டு... படப்பிடிப்பு தளத்தில் தொப்பி அணியாமல் நடித்ததாகக் கேள்விப் பட்டேன். உடனே என்னுடைய போனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினேன், என்னுடைய கணவரையும் , அந்த சீரியல் இயக்குனரையும் தொடர்பு கொண்டு, மொட்டை மாடியில் இருந்து குதித்து விடுவேன் என மிரட்டிவிட்டேன். அப்போது நான் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி மேல் நிற்பது போல் போட்டோவையும் எடுத்து அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு தொப்பியைப் போட வைத்து மீண்டும் அதே காட்சியைப் படமாக்கினார் இயக்குனர். நான் இப்படி செய்தது கூட என்னுடைய கணவர் நல்லதுக்குத் தான் என்று கூறிச் சிரித்தார் சோனியா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!