Grandma FirstLook: கையில் கத்தி.. ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் சோனியா அகர்வால்! 'கிராண்மா' ஃபர்ஸ்ட் லுக் இதோ!

Published : Nov 23, 2021, 02:30 PM IST
Grandma FirstLook: கையில் கத்தி.. ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் சோனியா அகர்வால்! 'கிராண்மா' ஃபர்ஸ்ட் லுக் இதோ!

சுருக்கம்

நடிகை சோனியா அகர்வால் (soniya Agarwal) நடித்துள்ள ஹாரர் திரைப்படமான, 'கிராண்மா' (Grandma Movie) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மிகவும் இளமையாக தெரியும் சோனியா அகர்வால், கையில் கத்தியோடு... ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டியுள்ளார்.  

நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ள ஹாரர் திரைப்படமான, 'கிராண்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மிகவும் இளமையாக தெரியும் சோனியா அகர்வால், கையில் கத்தியோடு... ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டியுள்ளார்.

GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், மற்றும் விநாயகா சுனில் ஆகியோர் இணைந்து இப்படத்தை  தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் என்பவர் 'கிராண்மா' படத்தை இயக்கியுள்ளார்.

கதையின் நாயகிகளாக மிக முக்கிய கதாபாத்திரத்தில், சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு, கேரளாவின் மலைப் பகுதிகளில் நடந்தது. மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் மீது படக்குழு வைத்துள்ள நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள்   சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில்  வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் கூறிய போது, "முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் தெரிவித்து கொள்வதாகவும், அவர்களது அன்பு  அளவிட முடியாதது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக உணர வைக்கிறது . படத்தின் ஆடியோ ,டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்றன.படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில்  அறிவிக்க இருக்கிறோம்."என்றார்.

படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்  பேசும்போது... " முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில்  வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய தொரு வெற்றியாக நான் உணர்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.படத்தில் பணியாற்றிய  நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. " என்றார். ,மேலும் 'கிராண்மா' கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட  சோனியா அகர்வால் ,சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?