
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும் சுஷாந்த் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாததால் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். தனது சோசியல் மீடியா பக்கங்களில் பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களையும், ட்ரால் போஸ்ட்களையும் பார்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் நொந்துபோனார். அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் உள்ள கமெண்ட் ஆப்ஷன்களை தற்காலிகமாக முடக்கியுள்ளார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!
இதனால் சோசியல் மீடியாவில் தன்னை வாரிசு நடிகை என விமர்சிப்பவர்களுக்கு சோனம் கபூர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவில், “ஆம் நான் என் தந்தையின் மகள் தான். அவரால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். இது ஒன்றும் அவமானமல்ல. எனக்கு இதை கொடுக்க எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். அதற்கு பின்னால் நான் பிறந்தேன் என்பது எல்லாம் என் விதி. அவரது மகளாக இருப்பதில் நான் பெருமைகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.