கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு திறமையா? தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ரகசியம்...!

Published : Jun 22, 2020, 06:39 PM IST
கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு திறமையா?  தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ரகசியம்...!

சுருக்கம்

தளபதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று, கோலாகலமாக கொண்டாட முடியவில்லை என்றாலும், ட்விட்டரில், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தூள் கிளப்பி வருகிறார்கள். விதவிதமான விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்டு தங்களுடைய கொண்டாட்டத்தை நள்ளிரவு 12 மணிக்கே துவங்கி விட்டனர்.  

தளபதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று, கோலாகலமாக கொண்டாட முடியவில்லை என்றாலும், ட்விட்டரில், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தூள் கிளப்பி வருகிறார்கள். விதவிதமான விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்டு தங்களுடைய கொண்டாட்டத்தை நள்ளிரவு 12 மணிக்கே துவங்கி விட்டனர்.

குறிப்பாக கொரோனா பிரச்சனை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது நாம் அறிந்தது தான். 

எனினும் இவருக்கு, கோலிவுட், டோலிவுட், மாலிவுட் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்தை, மழையாய் பொழிந்து வருகிறார்கள். மேலும் பிரபலங்கள் பலரும், தங்களுடைய விருப்பமான நடிகர்களில் ஒருவரான, விஜய்க்கு சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தளபதி விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் என இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், ரசிகர்களை இசையால் மயக்கும் விதத்தில், வயலின் வாசித்து, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், நடனம், நடிப்பு என பல்வேறு விதத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டிய நிலையில், இவருக்கு சூப்பராக வயலின் வாசிக்க தெரியும் என்பதையும் காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தில், விஜய் பாடி இருக்கும் 'குட்டி ஸ்டோரி பாடலை' தான் இசைத்து காட்டியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி