
46 வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு திரியுலகினர், விஐபிகள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதி ராஜா தெரிவித்துள்ள வாழ்த்து அனைவராலும் கவனிக்கப்படும் விஷயத்திற்கு வந்துள்ளது.
அவரது வாழ்த்தில், ‘’என் கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாப்படும் "விஜய்க்கு" இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த, உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கனக்கானரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்றமுதல் எழுத்தாகக்கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லாசிறப்பும் பெற்று நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் என பாரதி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை என அவர் கூறியிருப்பது, விஜயை பாரதிராஜா இயக்க மறுத்துவிட்டதாக பொருள்படும் வகையில் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.