விஜய் - அஜித் சண்டைக்கு நடுவே வந்த நயன்தாரா... ட்விட்டரில் கெத்து காட்டிய நியூ ஹேஷ்டேக்... வைரலாகும் வீடியோ!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 22, 2020, 04:38 PM ISTUpdated : Jun 22, 2020, 04:55 PM IST
விஜய் - அஜித் சண்டைக்கு நடுவே வந்த நயன்தாரா... ட்விட்டரில் கெத்து காட்டிய நியூ ஹேஷ்டேக்... வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

நயன் ஹேஷ்டேக் ட்ரெண்டாவதற்கு முன்பு தான் அஜித் ரசிகர்கள்  #NonPareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் முதலிடத்திற்கு ட்ரெண்ட் செய்தனர். 

தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கி வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் சகட்டு மேனிக்கு கவர்ச்சி நடித்து வந்த நயன்தாரா இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் அசர வைக்கும் நயன்தாராவின் தீவிர ரசிகர்களை ஒரு செய்தி செம்ம டென்ஷன் ஆக்கியது. 

 

இதையும் படிங்க:  பெரிய இடத்து மாப்பிள்ளையான ஐ.ஜி. மகன்... வருங்கால கணவரை இறுக்கி அணைத்த படி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை...!

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு, கொரோன அறிகுறி ஏற்பட்டதாகவும், அதனால் காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் எழும்பூரில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நயன்தாராவின் ரசிகர்கள் உண்மை நிலவரம் குறித்து விளக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று வாய் திறந்த விக்னேஷ் சிவன், நயனுக்கு கொரோனா எல்லாம் கிடையாது; எல்லாம் வதந்தி என தெளிவுபடுத்தினார். 

 

இதையும் படிங்க:  பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி... செய்தியைக் கேட்ட மறுகணமே தெறித்து ஓடிய சாய்பல்லவி பட ஹீரோ...!

மேலும் நயன்தாரா பற்றிய  கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்கும் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக மாறி, கியூட் மியூசிக் ஒன்றிற்கு குட்டி ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்து குஷியான ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் அதிக அளவில் அதை பகிர ஆரம்பித்தனர். இதனால்  #Nayanthara என்ற ஹேஷ்டேக் தேசிய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்தது. 

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

நயன் ஹேஷ்டேக் ட்ரெண்டாவதற்கு முன்பு தான் அஜித் ரசிகர்கள்  #NonPareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் முதலிடத்திற்கு ட்ரெண்ட் செய்தனர். இதனால் ஏற்கனவே தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆசை, ஆசையாய் உருவாக்கியிருந்த #HBDDearestThalaAJITH  என்ற ஹேஷ்டேக் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.  அந்த சமயத்தில் அஜித், விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக் சண்டைக்குள் நயன்தாரா ஹேஷ்டேக்கும் புகுந்து கொண்டது. இதனால் தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஹேஷ்டேக் பின்னுக்குத்தள்ளப்பட்டது. அதற்கு பதிலாக நயன்தாரா வெளியிட்ட அந்த க்யூட் வீடியோவோ தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!