PSBB பள்ளியின் அலட்சியத்தால் உயிரிழந்த பிரபல இயக்குனரின் மகன்..! 9 வருடத்திற்கு முன் நடந்த பகீர் சம்பவம்..!

Published : May 26, 2021, 08:01 PM IST
PSBB  பள்ளியின் அலட்சியத்தால் உயிரிழந்த பிரபல இயக்குனரின் மகன்..! 9 வருடத்திற்கு முன் நடந்த பகீர் சம்பவம்..!

சுருக்கம்

பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், இந்த பள்ளியில் நடந்த மற்றொரு மரண சம்பவம் குறித்த தகவல் 9 வருடத்திற்கு பின் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.  

பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், இந்த பள்ளியில் நடந்த மற்றொரு மரண சம்பவம் குறித்த தகவல் 9 வருடத்திற்கு பின் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்திரி என்ற பெயரில் பிரபல தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியர்களும் தங்களது வீடுகளில் இருந்தே அவரவர் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல், ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் வாட்ஸ் அப் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வகையில் கணக்கு பதிவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வந்தார். அப்படி ஆன்லைன் வகுப்பின் போது ஆசிரியர் ராஜகோபாலன் துண்டு மட்டும் அணிந்து கொண்டு அரை நிர்வாணத்துடன் வகுப்புகள் நடத்துவதும், மாணவர்கள் ஆன்லையில் இருக்கும் போது, குளியல் அறையில் இருந்து வருவது என மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், ஆன்லைன் வகுப்புக்கு பிறகு, பாடம் தொடர்பான சந்தேகங்களை மாணவன், மாணவிகள்  வாட்ஸ் அப் குழு மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டு வருகின்றனர். அப்படி பாடம் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர் ராஜகோபாலனிடம் கேட்டு வாட்ஸ் அப் குழுவில் வரும் மாணவிகளுக்கு, போன் செய்தும், வாட்ஸ் ஆப் மூலமும் ஆபாசமாக மெசேஜ் செய்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் சில டுவிட்டர் பக்கத்தில் ஆன்லைன் வகுப்பின் போது அரை நிர்வாணமாக பாடம் எடுக்கும் ஆசிரியர் என ராஜகோபாலன் புகைப்படத்துடன் பதிவு செய்தனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த ஆசிரியரின் செயலுக்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. மேலும் பள்ளி நிர்வாகிகளிடமும், அனைத்து ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பிரபல இயக்குனரின் மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழில் 'மாசிலாமணி, 'வேலூர் மாவட்டம்'  உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோகர். இவருடைய மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் தான் படித்து வந்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ரஞ்சன் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.  நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவு காரணமாகவே ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்த நீச்சல் பயிற்சியாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?