வீட்டிலேயே தடுப்பூசி போட்டு கொண்ட இயக்குனர் பாரதி ராஜா!

Published : May 26, 2021, 05:27 PM IST
வீட்டிலேயே தடுப்பூசி போட்டு கொண்ட இயக்குனர் பாரதி ராஜா!

சுருக்கம்

கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு கொள்வது அவசியம் என தமிழக அரசும், சுகாதர துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், இன்று பிரபல இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு கொள்வது அவசியம் என தமிழக அரசும், சுகாதர துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், இன்று பிரபல இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் முதல் அலை தமிழகத்தில், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள் மட்டுமே என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தடுப்பூசிகள் போட்டு கொண்டால் மட்டுமே, நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்தடுத்து நடிகர் நடிகைகளில், தங்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு, அந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூரி, நடிகை கீர்த்தி சுரேஷ், குக் வித் கோமாளி கனி, பவித்ரா லட்சுமி என வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது மட்டும் இன்றி, மற்றவர்களும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என கூறி வருகிறார்கள்.

மேலும் சத்யராஜ், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சிவகுமார் ஆகியோர் தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி குறித்தும், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் முறை குறித்தும், தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பழம்பெரும் இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய வீட்டிலேயே தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். இதனை அவரது மக்கள் தொடர்பாளர் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pongal 2026 Box Office: விஜய் படம் வராதது இவருக்குதான் ஜாக்பாட்டா? 2026 பொங்கல் வின்னர் லிஸ்டில் திடீர் திருப்பம்!
Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!