ஆச்சிஜன் லெவல் குறைந்தது... மருத்துவ மனையில் இடம் கிடைக்கவில்லை! கொரோனா அனுபவத்தை பகிர்ந்த நடிகர்!

By manimegalai aFirst Published May 26, 2021, 3:01 PM IST
Highlights

காமெடி நடிகர் காளி வெங்கட் கொரோனா தொற்றால் அவதி பட்ட 22 நாட்கள் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முதல் பலர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இப்படி பாதிக்க பட்ட பலரும், கொரோனா வந்து அவஸ்தை படுவதை விட, அதில் இருந்து நம்மை காத்துக்கொள்வது சிறந்தது என தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் காளி வெங்கட் கொரோனா தொற்றால் அவதி பட்ட 22 நாட்கள் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் கூறியிருப்பதாவது...  "கொரோனா இரண்டாவது அலையில் நானும் பாதிக்கப்பட்டேன். எனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 22 நாள் சிகிச்சைக்கு பின் குணமானேன். எனக்கு கொரோனா அறிகுறி அனைத்தும் இருந்தது. அதே போல் ஆக்சிஜன் லெவல் குறைந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஏற்பாடுகள் நடந்தது, ஆனால் தனக்கு பெட் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய நண்பர் ஒருவர் மருத்துவர் என்பதால், அவரின் அறிவுரை படி, தனிமை படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வந்தேன். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் சாப்பிட்டேன். இந்த கொரோனா அனுபவத்திலிருந்து நான் சொல்வது என்னவென்றால், கொரோனா வராமல் நம்மை பாதுகாத்து கொள்வது தான் முக்கியம். 

அதை மீறி ஒருவேளை கொரோனா வந்துவிட்டால் பதட்டமடைய வேண்டாம். என்னுடைய மன நிலை என்னவென்றால் கொரோனா வந்துவிட்டது, இதற்காக ரொம்ப புலம்ப வேண்டாம், மருத்துவர் கூறும் அறிவுரையை பின்பற்றுவோம், மருந்துகள் என்ன செய்யுமோ அதை செய்யட்டும் என்று முடிவு செய்தேன். நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தற்போது நான் முழுவதும் குணமாகி வந்து விட்டேன். என தெரிவித்துள்ளார்.

கொரோனா வந்தவர்கள் முக்கியமாக பதட்டமடைய வேண்டாம் என்றும் மருத்துவர் கூறும் வழிமுறையை பின்பற்றுங்கள் என்பது தான் நான் கூறும் முக்கிய செய்தியாகும்’ என்று தெரிவித்தார்.

pic.twitter.com/GIDWnUxInB

— Kaali Venkat (@kaaliactor)

 

click me!