
58 வயதிலும் செம்ம ஃபிட்டாக உடலை வைத்து கொண்டு, மிகவும் ஆக்டிவான நபராக வலம் வரும் நடிகை ராதிகாவின் லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலியாக நடித்தவரா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிளிர்ந்தார். 80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த ராதிகா, தற்போது வரை வெள்ளித்திரையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக சரத்குமாருடன் ராதிகா நடித்த “வானம் கொட்டட்டும்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, சித்தி, அண்ணாமலை, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்து வருகிறார். வழக்கமான சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது.
இந்நிலையில் இவர் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரை, கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் தான் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் தான் தன்னுடைய 20 ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர் ராதிகா - சரத்குமார் ஜோடிகள். மேலும் கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக, ஓட்டு கேட்டு... கணவருடன் சேர்ந்து சூறாவளி பிரச்சாரமும் மேற்கொண்டார்.
தேர்தலில் தோல்வியடைந்தாலும், தங்களுடைய தோல்விக்கு என்ன காரணம் என ஆராயப்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும் தற்போது, லாக் டவுன் காரணமாக வீட்டில் பொழுதை கழுத்து வரும் இவர், சமூக வலைத்தளத்தில் ஃபிட்னஸ் சீக்ரட் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்து அசர வைத்துள்ளார் ராதிகா.
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.