
விஜய்சேதுபதியை வெளுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: செகண்ட் ஹீரோ வாழ்க்கைக்கு ரெடியாகிட்டியா ?
* வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் தளபதி விஜய்க்கு தாறுமாறாக டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியிருக்கிறது. ஆனால் அதுக்காக நான்கு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கிக் குவித்த ‘பாரசைட்’ படத்தை மின்சார கண்ணா படத்தின் காப்பி என்றும், ‘தளபதி படத்தை காப்பியடித்தவர்கள் ஆஸ்கார் வாங்கிவிட்டனர். இதுதான் தளபதியின் தாராளம்’ என்று ரசிகர்கள் போட்டதெல்லாம் ஓவர் டோஸ். இதற்கு சினிமா விமர்சகர்கள் சிலர் ‘பாரசைட் படத்தின் போஸ்டர் பக்கம் கூட மின்சார கண்ணா படம் வந்து நிக்க முடியாது!’ என்று குட்டியுள்ளனர் நறுக்கென.
* வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஹரீஸ் கல்யாணும் ஒருவர். மூணு நாலு படம் நடித்திருந்தாலும் பையன் நச்சுன்னுதான் நடிக்குறாப்ல. ‘எனக்கு அடையாளம் கொடுத்தது ரசிகர்கள்தான். அவங்க கூடதான் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடப்போறேன்.’ என்று மனுஷன் ஏகத்துக்கும் சர்ப்பரைஸ் கொடுத்து காதலர் தினத்தை கன்னாபின்னான்னு ஆக்கியிருக்கிறார்.
* நயன்தாராவுக்கு வயசாகிடுச்சு, முகத்துல முதுமை தெரியுது, ஆனாலும் அழகாதான் இருக்காப்ல! என்று நயனை ஒரு தினுஷாக குளிப்பாட்டி, விமர்சித்து கும்மியடித்துக் கொண்டிருந்தது நெட்டிசன் உலகம். இந்த நிலையில், விளம்பரம் ஒன்றின் ஷூட்டிங்குக்காக வெள்ளை நிற புடவை, பிளவுஸில் கார்டன் செட்டில் நயன் இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. அதில் நயனின் எக்கச்சக்க இளமையை பார்த்துவிட்டு ‘விக்கி நீ கொடுத்து வெச்சவன் டா!’ என்று பொசுங்கியுள்ளனர் பொறாமையில்.
* ராஜேஷ் எம் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் என அத்தனையும் பக்காவாக ரெடி. சந்தானம் கேட்கவில்லை ஆனாலும் ராஜேஷே சென்று அவரிடம் அந்த ஃபைலை கொடுத்திருக்கிறார். ‘ப்ரோ எதுக்கு இதெல்லாம்.’ என்றபடியே ஒரு மரியாதைக்காக டயலாக் போர்ஷனை புரட்டிப் பார்த்த சந்தானம் தாறுமாறாக சிரித்திருக்கிறார் வெடி காமெடி வசனங்களைப் பார்த்து.
* விஜய்யுடன் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் பட ஷூட்டின் போது விஜய்யை வருமான வரித்துறை அள்ளிக் கொண்டு போய் விசாரித்ததை வைத்து ஏகப்பட்ட யூகங்கள், வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இந்த நிலையில் இதையெல்லாம் வைத்து ‘வேற வேலை இருந்தா போய் பாருங்கடா’ என்று மிக மரியாதையாக (!?) விஜய் சேதுபதி ஒரு ட்விட் போட்டார்.
இதற்கு நெட்டிசன்கள் அவர் மீது பாய்ந்து பிடுங்கிவிட்டனர். ‘என்ன மரியாதை ஓவரா இருக்குது. சோறு போடுறது ரசிகன் தான்னு மறந்துடாதே. விஜய்க்கு ஓவரா ஜால்ரா போடுறீயே, ஏன் உன் படம் எதுவுமே ஓடலைன்னு இப்படி செகண்ட் ஹீரோ வாழ்க்கைக்கு ரெடியாகிட்டியாடா?’ என்று கிழித்துள்ளனர்.
- விஷ்ணுப்ரியா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.