Sobhita Dhulipala : பிரபல நட்சத்திர ஜோடி சோபிதா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஒரு ஜோதிடர்.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் என்றால் அது இப்பொது நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் தான். நடிகை சமந்தாவை பிறந்து சுமார் 3 ஆண்டுகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், இப்பொது தனது இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகியுள்ளார் நாக சைதன்யா. கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட விழாவில் சைதன்யா மற்றும் சோபிதாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில், இன்னும் அவர்களின் திருமணமே நடந்து முடியாத நிலையில் இந்த நட்சத்திர ஜோடி 2027ம் ஆண்டுக்குள் விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என்று பீதியை கிளப்பியுள்ளார் ஜோதிடர் ஒருவர்.
ஜோதிடர் வேணு ஸ்வாமி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் தைரியமாக அதே நேரம் பலரையும் கடுப்பேற்றும் வண்ணம் சில விஷயங்களை பேசியுள்ளார். அவர்களின் ஜாதகத்தை கணித்து தான் சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளதாக கூறும் அவர், சைதன்யா மற்றும் சோபிதாவின் உறவு 2027ல் முடிவுக்கு வரும் என்றும், ஒரு மர்மமான மூன்றாவது பெண்ணின் தொடர்பு காரணமாக தான் அந்த நிகழ்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவருடைய இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியிலும், சினிமா துறையினர் மத்தியிலும் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
சமந்தா பிரிவை கணித்த வேணு ஸ்வாமி?
தன்னை சுற்றி பெருகி வரும் வெறுப்பு என்னும் வெப்பத்தை உணர்ந்த வேணு ஸ்வாமி சற்று ஜம்படித்த ஜோதிடர் வேணு, ஏற்கனவே நாக சைதன்யா தனது முதல் மனைவி சமந்தாவை பிரிவர் என்று தான் முன்கூட்டியே கணித்துள்ளதாகவும். அதன் தொடர்ச்சியாக தான் இந்த விஷயத்தை தான் கூறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். கூடுதலாக MAA தலைவர் மஞ்சு விஷ்ணுவுடன் தான் பேசியதாகவும், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்காலம் குறித்து மேற்கொண்டு எந்த கணிப்பையும் செய்வதிலிருந்து விலகி இருக்கபோவதகாவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நயன்தாராவையும் விட்டுவைக்காத வேணு ஸ்வாமி
நயன்தாரா, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு அவருக்கு மிகப்பெரிய இக்கட்டான சூழல் ஏற்படும் என்றும், ஒரு கட்டத்தில் அந்த தம்பதியினர் பிரிந்து விடுவார்கள் என்றும் ஏற்கனவே அவர் கணித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் இனையவாசிகள் சிலர் வெளியிட்ட தகவலின்படி அந்த ஜோதிடர் கணித்த விஷயங்கள் நயன்தாரா வாழ்க்கையில் பழித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
உதாரணமாக திருமணத்திற்கு பிறகு திருப்பதி கோயில் பிரச்சனை, அன்னபூரணி திரைப்பட பிரச்சனை, தொழில் ரீதியான பிரச்சனை என்று பல பிரச்சனைகளை சந்தித்தார் நயன்தாரா. அதேபோல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், கிடைக்கவிருந்த மிகப்பெரிய வாய்ப்பான அஜித் திரைப்பட வாய்ப்பு கைநழுவி போனது. ஆகையால் அவர் கணித்தது சரியாகி உள்ளது என்று கூறியுள்ளனர் இணையவாசிகள்.