சோப்பு வியாபாரம், ஒரு வேளை சாப்பாடு.. இவ்வளவு பெரிய நடிகையின் மகளுக்கு இந்த நிலைமையா.

Published : Jun 14, 2022, 06:41 PM ISTUpdated : Jun 14, 2022, 06:44 PM IST
சோப்பு வியாபாரம், ஒரு வேளை சாப்பாடு.. இவ்வளவு பெரிய நடிகையின் மகளுக்கு இந்த நிலைமையா.

சுருக்கம்

திரைப்படம் மற்றும் சீரியல்களில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் சோப்பு விற்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் கூறியுள்ளார். ஒரு மெகா சீரியல் கிடைத்தால் அது தனக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திரைப்படம் மற்றும் சீரியல்களில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் சோப்பு விற்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் கூறியுள்ளார். ஒரு மெகா சீரியல் கிடைத்தால் அது தனக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில்  உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள்தான். இந்த வரிசையில்  தமிழ் சினிமாவுக்கு 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் பல வேடங்களில் நடித்தவர் தான் நடிகை லட்சுமி, இவர்வுடன் நடிக்காத உச்ச நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். இவரது வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் தான் அவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், இவர் 90களில் சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும், ஆனால் காலப்போக்கில் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். உள்ளே வெளியே,  ஹவுஸ்ஃபுல், ஆறு, ஜனா, வேல், குமரன் சன் ஆப் மகாலட்சுமி என சில படங்களின் பெயர்களை கூறலாம்.

தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே ஒரு சில தொடர்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாததால் சோப்பு விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் எல்லா விமர்சனங்களுக்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும், அவர் பத்திரிகையாளர் என்ற முறையில் அவரது வேலையை செய்கிறார். அதனுடைய பாவ கர்மாக்களை அவர் அனுபவிக்கட்டும், மற்றபடி இதில் கூற ஒன்றுமில்லை.

1990இல் ஊரெல்லாம் உன் பாட்டு என்ற படத்தில் ராமராஜன் உடன் நடிப்பதற்காக சென்று இருந்தோம், அப்போது ஒரு குடும்ப பாங்கான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க நான் சென்றிருந்தேன், அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் ஐஸ் வரியா என என்னை அழைத்தார், இதுதான் இந்த சமூகம். இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், மோசமான நிலையில் இருக்கிறேன், இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லை எனக்கு பொருளாதாரமும் இல்லை, அதனால் ஜாலியாக சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது கூட கடன் இல்லை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் வேலை இல்லை, நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை, நான் பெருமைப்படுகிறேன். எந்த வேலை இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக செல்லுவேன்.

இதில் என்ன தவறு இருக்கிறது, நான் ஆடம்பரமான ஆள் இல்லை, பட்டுப்புடவை கட்டுவதில்லை, யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன், ஆனால் இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும், நான் பிழைத்தது சீரியலை வைத்துத் தான் சினிமாவால் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
Jananayagan Censor: விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?