
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பைத்தியமாக நடித்துக்கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு நபர் மட்டும் பைத்தியமாக நடித்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு சீக்ரட் பார்முலாவை திருடுவார்.
அதனை மற்றவர்கள் யார் திருடுகிறார் என கண்டுபிடிக்க வேண்டும் என்பது விதி. பைத்தியமாக நடிக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் அவரவருக்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
இதில் சினேகனுக்கு தான் பைத்தியம் போல் நடித்து திருடும் வேடம் கொடுக்கப்பட்டது. சினேகன் எப்படி யாருக்கும் தெரியாமல் அதனை டாக்டராக இருக்கும் வையாபுரியை குடிக்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அனைவரும் வெளியில் சென்ற போதும், ஆண்கள் ரூமில் இருக்கும் நேரத்தில் இதனை திருடி ஒரு பாட்டில் உள்ளே ஊற்றி கொண்டார் சினேகன். இதனை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தாலும் ஆரவ், சக்தி, வையாபுரி என அனைவரும் உள்ளே இருந்து பார்த்து இவர் தான் திருடுவார் என கண்டுபிடித்து விட்டு வெளியே வந்து யார் இதை திருடியது என தெரியாதது போல் நடிப்பார்கள் அனைவரும்.
இறுதியில் சினேகன் தான் திருடினார் என தெரியவரும். பின் இந்த டாஸ்கை முடிக்க அனைவரும் வையாபுரியை பிடித்துக்கொண்டு அவர் வாயில் இந்த சீக்ரெட் பார்முலாவை அவருடைய வாயில் ஊற்றுவார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.