Snehan kisses: இனி இப்படி கிஸ் பண்ணாதீங்க..அப்புறம் இது தான் நடக்கும்...நேரலையில் செல்லமாக மிரட்டிய கன்னிகா..

Anija Kannan   | Asianet News
Published : May 20, 2022, 01:39 PM IST
Snehan kisses: இனி இப்படி கிஸ் பண்ணாதீங்க..அப்புறம் இது தான் நடக்கும்...நேரலையில் செல்லமாக மிரட்டிய கன்னிகா..

சுருக்கம்

Snehan kisses Video: நேரலையில் முத்தம் தராதீங்க, என சினேகனை அவருடைய மனைவி கன்னிகா அன்பாக எச்சரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கவிஞர் சினேகன், தமிழ் திரையுலகில் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்தவர். இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர். பூமி வீரன் உள்ளிட்ட ஒரு  சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி:

இருப்பினும், இவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து, பிக்பாஸ் நிகழ்ச்சியாகும்.  ஆம், இவர் முதல் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு கட்டி பிடி சினேகன் என்ற பெயரில் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 

கவிஞர் சினேகன்-கன்னிகா திருமணம்:

இதையடுத்து, சினேகன், பிரபல நடிகையான கன்னிகா ரவியை காதலித்து கமல் ஹாசன் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் இடையிலேயே வெளியேறினார். இவருடைய மனைவி, கன்னிகா நன்றாக கம்பு சுற்றுவார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது. 

லைவ் வீடியோ அட்ராசிட்டி:

இந்நிலையில், தற்போது வெளி வந்துள்ள புதிய வீடியோவில் ''தான் வரைந்த ஓவியம் எப்படி இருக்கிறது'' என்று கன்னிகா கேட்கிறார். அதற்கு சினேகன், ''உன்னை போன்றே மிகவும் அழகாக இருக்கிறது'' என்று கூறியபடி முகத்தில் முத்தம் கொடுக்கிறார். உடனே, ''கன்னிகா இப்படி எல்லாம் நேரலையில் செய்யாதீங்க, ரொம்ப கேவலமா திட்டுறார்கள்'' என வீடியோவை உடனே கட் செய்து, நான் வீடியோ விட மாட்டேன் என்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் படிக்க .....Don: ஒரே வாரத்தில் டான் செம்ம வசூல் வேட்டை....தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடியாம்..? படு குஷியில் ரசிகர்கள்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?
யாரோட சொத்த யார் ஆட்டைய போடுறது: ஓ நீ தான் அந்த அர டிக்கெட்டா? அப்பத்தா எண்ட்ரியால் அனல்பறக்கும் எதிர்நீச்சல்!