
நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார்.
ஏற்கனவே சினேகா - பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில், சினேகா கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இதைதொடந்து தற்போது, முதல் முறையாக தன்னுடைய அழகிய மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு மகளிர் தினத்தன்று முதல் காட்டியுள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது. சினேகாவின் குழந்தை பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறது என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
குழந்தையின் புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.