
கடந்த 2016ஆம் ஆண்டு, வெளியான 'கிரீக் பார்ட்டி' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. இதைத்தொடர்ந்து, அஞ்சனி புத்ரா, சமாக் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்கு பட வாய்ப்புகள் வர, நடிகர் நாக சௌரியாவிற்கு ஜோடியாக 'சலோ' படத்தின் நடித்தார். இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'கீதா கோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மேலும் இவருக்கு, சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்று தந்தது. தெலுங்கு, கன்னடம், மொழி படங்களை தொடர்ந்து ரஷ்மிக்கா தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' படத்திலும் நடித்து வருகிறார்.
திரையுலகில் அறிமுகமான நான்கு வருடங்களிலேயே மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட ராஷ்மிக்கா, புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் இவரை தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்துள்ளது. மிக குறைத்த வருடத்தில், ரஷ்மிக்கா 1 மில்லியன் ரசிகர்களை கவர்ந்திருப்பது சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இவரின் அசுர வளர்ச்சி பல முன்னணி நடிகைகளை கூட வாய்பிளக்க வைத்துள்ளதாம்.
ரசிகர்களின் அன்பிற்கு ராஷ்மிக நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ள ட்விட் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.