தாறுமாறாக பேசிய மன்சூர் அலிகான்... கைக்கு ’திண்டுக்கல்’ பூட்டு போடும் போலீஸார்..!

Published : Aug 01, 2019, 04:27 PM ISTUpdated : Aug 01, 2019, 04:31 PM IST
தாறுமாறாக பேசிய மன்சூர் அலிகான்... கைக்கு ’திண்டுக்கல்’ பூட்டு போடும் போலீஸார்..!

சுருக்கம்

பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் அமித் ஷா தொடர்பாக அவதூறாக பேசிய வழக்கில் நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் அமித் ஷா தொடர்பாக அவதூறாக பேசிய வழக்கில் நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மன்சூர் அலிகான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரையும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ஒருமையில் பேசியதாக சர்ச்சை பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் சென்னை மத்தியக்குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேட்டி யுடியூப்பில் வேகமாக டிரெண்டாகி வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மன்சூர் அலிகான் மீது பிரிவினையைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!