
தமிழில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, ஒவ்வொரு போட்டியாளரும், ஏதோ ஒரு விதத்தில் பிரபலமானவர்கள்.
அந்த வகையில், இயக்குனரும் நடிகருமான சேரன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட, மொட்டை கடுதாசி டாஸ்க்கிற்கு அணைத்து பிரபலங்களும், தங்களுடைய மனதில் உள்ள கேள்விகளை கேட்க, அதற்கு போட்டியாளர்களும் பதிலளித்தனர்.
அந்த வகையில், சேரன் பற்றி நடிகர் சரவணன் "ஒரு இயக்குனராக சாதித்து, பல்வேறு விருதுகளை பெற்ற பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அவர், "பிரபல இயக்குனராக நான் அறியப்பட்டாலும் , விருதுகளை வாங்கி இருந்தாலும், தனக்கு கிடைத்த கடைசி வெற்றி 'ஆட்டோகிராப்' திரைப்படம் தான்.
அதற்கு பின் இயக்கிய படங்கள் தனக்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்த போது , தன்னை கலந்து கொள்ளுமாறு கூறியவர் நடிகர் விஜய் சேதுபதி தான்.
இதுவரை உங்களுடைய வாழ்க்கையில் எப்படி பட்ட கஷ்டங்களை தாண்டி வளர்ந்தீர்கள் என்பது, இளைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தெரியாது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு பின் உங்கள் மேல் அவர்களுடைய பார்வை படும் என அவர் கொடுத்த ஊக்கம் தான் இந்த நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள காரணம் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.