அடி.. உதை.. வாங்கினால்தான் உண்மையான காதல்: எஸ்.கே.சி பட விழாவில் பேச்சு (வீடியோ)

Sep 19, 2017, 7:15 PM IST



பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பள்ளிப்பருவத்திலே. இவருக்கு ஜோடியாக, கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா நடிக்கிறார். 

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய நடிகர் இளைய தளபதி விஜயின் தந்தை, இந்தப் படம் மிகவும் அழகான மென்மையான பள்ளிப் பருவத்துக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும், காதலில் எப்போதுமே அடி உதை வாங்கி காதலித்தால் தான் அது உண்மையான காதல் என்றும் கூறினார்.

இவரைத் தொடர்ந்து நடிகை தேவயானி படக்குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துக்களைக் கூறி தன்னுடைய உரையை மிகவும் சுருக்கமாக முடித்துக்கொண்டார். பின் படத்தின் நாயகன் நந்தன் ராம் இந்தப் படத்தின் நாயகன் கதை தான் என்று கூறினார்.

ஏற்கெனவே அலைகள் ஓய்வதில்லை மற்றும் துள்ளுவதோ இளமை படத்தின் கதைகளுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.