செருப்புக்காக அனைவரிடமும் கெஞ்சும் கணேஷ்!

 
Published : Sep 19, 2017, 06:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
செருப்புக்காக அனைவரிடமும் கெஞ்சும் கணேஷ்!

சுருக்கம்

Ganesh who asks everyone for sandals

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பாராத பல டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.  அப்படித் தான் தற்போது நடிகர் கணேஷ் வெங்கட்ராமிற்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ்ஸிடம் இருந்து ஒரு போன் வருகிறது. அதனை கணேஷ் வெங்கட்ராம் எடுக்கிறார்.

அவரிடம் இங்கு உள்ள போட்டியாளர்கள் யாரையாவது கன்வீன்ஸ் செய்து, அவரிடம் உள்ள நான்கு ஜோடி செருப்புகளை அறுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

முதலில் செருப்புக்காக, பிந்துவிடம் கெஞ்சுகிறார் கணேஷ். அதற்கு பிந்து தன்னிடம் உள்ளது நான்கு ஜோடி செருப்புகள் தான் என்றும் அதை தன்னால் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்து விடுகிறார்.

அனைவரிடமும் செருப்புக்காக கணேஷ் கெஞ்சுவதைப் பார்த்த சுஜா, தானாக முன்வந்து நான்கு செருப்புகள் இருப்பதற்காகவும், அதனைத் தருவதாகவும் சொல்லி, தனக்கு பாயிண்ட்கள் மிகவும் முக்கியம் எனக் கூறுகிறார்.

இவருடைய செயலைப் பார்த்து ஆரவ், சுஜா ஜெயிப்பதற்காக தன்னுடைய தலையில் உள்ள முடியை மொட்டை அடித்துக்கொள்ளவும் தயாராகத்தான் இருப்பார் எனக் கூறி கிண்டல் செய்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!