Actor Sj Suryah : காஸ்ட்லி வில்லன் எஸ்.ஜே.சூர்யா 10 மணிநேரம் கதை கேட்டாராமே!! இது எந்த படத்துக்கு?

By Ganesh Perumal  |  First Published Jan 10, 2022, 7:41 AM IST

மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தின் வெற்றிக்கும் இவரது வில்லன் கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது. 


குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, நியூ, நண்பன், இறைவி போன்ற படங்களில் திறம்பட நடித்து, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஸ்ட் விட்டார்.

அதுவரை ஹீரோவாகவும், காமெடி வேடங்களிலும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவை, வில்லனாக்கி அழகு பார்த்தார் ஏ.ஆர்.முருகதாஸ். மகேஷ் பாபு என்கிற மிகப்பெரிய நடிகர் அப்படத்தில் நடித்திருந்த போது, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தனித்து நின்றது. காரணம் அவரது வில்லத்தனம் தான்.  'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Latest Videos

இதையடுத்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்கிற வில்லன் கதாபாத்திரத்தை தனக்கே உரித்தான நக்கல் நையாண்டியுடன் நடித்து மெருகேற்றி இருந்தார். மாநாடு படத்தின் வெற்றிக்கும் இவரது வில்லன் கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே அண்மையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் கதை எஸ்.ஜே.சூர்யாவை மிகவும் கவர்ந்ததாம். இதனால் இந்த படத்தின் முழுகதையையும் இயக்குனர் ஆதிக ரவிச்சந்திரனிடம் 10 மணிநேரம் கேட்டாராம். முழு கதையையும் கேட்டு முடித்து அசந்துபோன எஸ்.ஜே.சூர்யா, அட கடவுளே எல்லா நல்லகதையும் என்கிட்டயே வருதே, இது கண்டிப்பாக ‘மாநாடு 2’ னு சொல்லலாம் என டுவிட் போட்டாராம். 

click me!