Yaanai movie update : பொங்கலுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு.... வெளியானது யானை படத்தின் மாஸ் அப்டேட்

Ganesh A   | Asianet News
Published : Jan 09, 2022, 05:17 PM IST
Yaanai movie update : பொங்கலுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு.... வெளியானது யானை படத்தின் மாஸ் அப்டேட்

சுருக்கம்

யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹரி (Hari) இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் சூர்யா - ஹரி கூட்டணி 6வது முறையாக ஒன்றிணையவிருந்த 'அருவா' படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால், அப்படைத்தை கைவிட்டனர்.

தற்போது சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து விட்ட, தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யை (Arun Vijay) ஹீரோவாக வைத்து ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி உள்ளார் இயக்குனர் ஹரி. கிராமத்து கதையம்சம் கலந்து, ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், யானை படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!