சிவக்குமார் போனைத் தட்டிவிடும் முன்பு எடுக்கப்பட்ட செல்ஃபி! கொடூர கோப முகத்தை நீங்களே பாருங்களேன் !

Published : Oct 29, 2018, 06:35 PM IST
சிவக்குமார் போனைத் தட்டிவிடும் முன்பு எடுக்கப்பட்ட செல்ஃபி!  கொடூர கோப முகத்தை நீங்களே பாருங்களேன் !

சுருக்கம்

பிரபலங்கள் என்றாலே அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது அனைவருக்கும் அலாதி பிரியம்தான். அதுவும் சினிமா பிரபலங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். முண்டியடித்து எப்படியாவது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமை பேசுவார்கள். 

பிரபலங்கள் என்றாலே அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது அனைவருக்கும் அலாதி பிரியம்தான். அதுவும் சினிமா பிரபலங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். முண்டியடித்து எப்படியாவது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமை பேசுவார்கள். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், தாங்கள் வைத்துள்ள செல்போன் மூலமாகவே செல்ஃபி எடுத்துக் கொள்வது ட்ரண்டாக உள்ளது. இதனை தவிர்க்க இயலாமல் பிரபலங்களும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், சிலர் நாசுக்காக தவிர்க்கும் சம்பவங்களையும் நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் நெற்று நடந்த கடை திறப்பு விழாவின்போது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் அவரது செல்போனை தட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர் நடிகர் சிவக்குமார்தான். அந்த ரசிகரோ, சிவகுமாருக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அதனை சிவக்குமார் தட்டி விட்டது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

சொற்பொழிவாளர், ஓவியர், கவிஞர் என தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சிவக்குமார் இப்படி நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடை திறப்புக்கு வந்த அவர், இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் சிவக்குமாரா இப்படி? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?