Ayalaan Audio Launch: 'அயலான்' ஆடியோ லான்ச் மகள் - மகனுடன் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி!

By manimegalai aFirst Published Dec 26, 2023, 7:25 PM IST
Highlights

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று நடைபெற உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் மனைவி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் கலந்து கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா, தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏலியன் கதை களத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ள 'அயலான்' திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்... இஷா கோபிகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, கருணாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

& Arrived At

Follow » More Exclusive Updates | pic.twitter.com/ClPb1WGDcM

— Sivakarthikeyan News (@ActorSK_News)

 

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையிலும்... போஸ் ப்ரோடுக்ஷன் பணிகள் காரணமாக தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்தது. ஒரு வழியாக அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக் குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள தாஜ் கோரமாண்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசை வெளியீட்டு விழாவில் லைவ் பெர்ஃபாமன்ஸ் செய்கிறார். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டி வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தன்னுடைய மகள் ஆராதனா மற்றும் மகன் குகனுடன் வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

. anni Vandhachu pathachu pic.twitter.com/TJ7qP6fr68

— • Chichilubu Sk👽💙❼ (@guruawesome)

 

click me!